திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ப.கோபி, ஆட்சியர் க.விஜயகார்த்திகேயனிடம் நேற்று அளித்த மனுவில், "திருப்பூர் மாநகரம் மங்கலம் சாலை ஆண்டிபாளையத்தில் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமாக 9 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தை ஊர் மக்களுக்கு தெரியாமல், அவர்களிடம் எந்தவித கருத்தும் கேட்காமல் வேறு துறைகளுக்கு மாற்ற இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை மேற்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, மேற்படி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் மாநகர காவல்துறைக்கு குடியிருப்புகள் கட்ட முயற்சிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோயில் நிலத்தை திரும்ப ஒப்படைக்க வலியுறுத்தியும் ஆண்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள ஏழு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முத்தரப்பு பேச்சுவார்த்தைக்காக தற்காலிகமாக போராட்டம் திரும்பப்பெறப்பட்டது. கோயில் நிலத்தை திரும்ப ஒப்படைக்காவிட்டால், அடுத்தகட்டமாக போராட்டங்களை முன்னெடுக்கமக்கள் தயார் நிலையில் உள்ளனர்"என்று குறிப்பி்ட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago