கடலூரில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

கடலூர் அரசு போக்குவரத்துக் கழகபணிமனை அருகே மத்திய தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.

போக்குவரத்துக் கழக ஊழியர் களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும். போக்குவரத்துக் கழகஅதிகாரிகளுடன் கலந்தாலோசிக் காமல் தன்னிச்சையாக 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என அறி வித்த முதல்வரை கண்டிப்பது என் பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினர் சார்பில்மாநிலம் தழுவிய ஆர்ப்பாட் டம் நடைபெறும் என அறிவிக்கப்பட் டிருந்தது.

அதன்படி நேற்று கடலூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு மத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொமுச தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். சிஐடியூ சம்மேளன துணைத்தலைவர் பாஸ்கரன், ஏஏஎல்எல்எப் பொதுச்செய லாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்எல்எப் துணைத் தலைவர் பாலகிருஷ் ணன் வரவேற்றார். இதில், தொழிற் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் அவர்கள் 20 சதவீத போனஸை உடனடியாக வழங்க வில்லை எனில் அடுத்தகட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் எனக் கூறிவிட்டு கலைந்து சென் றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்