விழுப்புரத்தில் பாரதீய போக்குவரத்து தொழிற்சங்க பேரவை யின் மாநில செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
மாநில பொறுப்பாளர் ராமராஜசேகர் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் பங்கேற்ற தென் பாரத அமைப்பு செயலாளர் துரைராஜ் செய்தியாளர்களிடம் கூறியது:
போக்குவரத்து தொழிலாளர் களுக்கு ஊதிய ஒப்பந்தத்தை பேசி முடிக்க வேண்டும். 10 சதவீத போனஸை 20 சதவீதமாக மாற்றி அமைக்க வேண்டும். கரோனா தொற்றால் உயிரிழந்தபோக்குவரத்து தொழிலாளர்களுக்கும் ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை முறையாக எல்ஐசிக்கு செலுத்த வேண்டும். மின்சார வாரியம், போக்குவரத்து கழகம் உள்ளிட்டவைகளை தனியார் மயமாக்கும் முயற்சியை அரசுகைவிடவேண்டும் என்று தெரி வித்தார்.
மாநில பொதுச் செயலாளர் முருகேசன், மாநில பேரவைச் செயலாளர் விமேஸ்வரன் உள் ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago