அனைத்து தங்கும் விடுதிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் புதிய இணையதளம் தொடங்கப் பட்டுள்ளது.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய சுற்றுலாத்துறை சார்பில் இந்திய அளவில் அனைத்து தங்கும் விடுதிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் www.nidhi.nic.org என்கிற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தி லுள்ள தங்கும் விடுதிகளில் பதிவு மேற்கொள்ளலாம்.
இது தவிர கரோனாவுக்கு எதிராக விழிப்புணர்வு பயிற்சி தரும் வகையில் www.saathi.qcin.org என்கிற புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சுயசான்றிதழ், சுயபங்கேற்பு சான்றிதழ், சுயமதிப்பீட்டு சான்றிதழ் ஆகிய மின்னணு சான்றிதழ்கள் இணையம் வாயிலாக வழங்கப்படும். மேற்கண்ட இணையதளம் வாயிலாக தங்கும் விடுதியின் தரம் மற்றும் வணிக மேம்பாடு உள்ளிட்ட ஆதாரங்களையும் பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர், மின்னஞ்சல் வாயிலாக பெரும்பான்மையான தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கும் கடந்த மாதம் 13-ம் தேதி தகவல் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago