வேலூர் மாவட்டத்தில் கரோனாவுக் கான சித்த மருத்துவ சிகிச்சை ஆய்வறிக்கையை ஆட்சியர் சண்முகசுந்தரத்திடம் சித்த மருத்து வர்கள் சமர்ப்பித்தனர். இந்த அறிக்கையை பிரதமர் மோடிக்கும்,மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கும் மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைக்க உள்ளார்.
கரோனா வைரஸ் தொற்றுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்க தமிழகத்தில் முதல் முறை யாக வேலூரில் தனி மையம் ஏற்படுத்தப்பட்டது. வேலூர் தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தின் ஒரு பகுதியில் கடந்த ஜூலை 10-ம் தேதி முதல் சிகிச்சை மையம்தொடங்கப்பட்டது.
மேலும், கரோனா வைரஸ் தொற்றுக்கு சித்த மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளவும் மத்திய அரசு அனுமதி அளித்தது.
அதன்படி, வேலூர் மையத்தில் சித்த மருத்துவ சிகிச்சைக்கான ஆய்வுக்கு 23 பேர் விருப்பம் தெரிவித்த நிலையில், 3 பேர் திடீரென விலகினர். இதையடுத்து 20 பேருக்கான சித்த மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இவர் களுக்கு கபசுர குடிநீர், தாளிசாதி வடகம், அமுக்கரா மாத்திரை, ஆடா தோடை மணப்பாகு, பிரமானந்த பைரவம் மாத்திரை என ஐந்து வகையான மருந்து,மாத்திரைகள் தொடர்ந்து வழங்கப்பட்டன.
வேலூர் மாவட்டத்தில் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்க மொத்தம் 5 மையங்கள் ஏற்படுத்தப்பட்டது. இங்கு சுமார் 9 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றனர். மாவட்டத்தில் தற்போது கரோனா எண்ணிக்கை குறைந்த நிலையில் சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் மூடப்பட்டன.
இந்நிலையில், மத்திய அரசின் அனுமதியுடன் தொடங்கிய சித்த மருத்துவ சிகிச்சை குறித்த ஆய் வறிக்கையை வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திடம் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் சுசி கண்ணம்மா மற்றும் சித்த மருத்துவ முதன்மை ஆராய்ச்சியாளர் மருத்துவர் தில்லைவாணன் ஆகியோர் நேற்றுசமர்ப்பித்தனர். இந்த ஆய்வறிக் கையை பிரதமர் மோடிக்கும், மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கும் அனுப்பி வைக்க மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உறுதியளித் துள்ளார்.
இந்த ஆய்வறிக்கை தொடர் பாக மருத்துவர் தில்லைவாணன் கூறும்போது, ‘‘ஆய்வின்போது சித்த மருந்துகள் வழங்கப்பட்ட நபர்களின் ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கையை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் பரிசோதனை செய்ததில் 1.5 லட்சத்தில் இருந்து 3 முதல் 4 லட்சம் வரை அதிகரித் திருந்தது.
சித்த மருந்துகள் அளிக் கப்பட்ட 7-வது நாளில் ஆர்டிபி சிஆர் பரிசோனையில் 16 பேர் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தது தெரியவந்தது.
நுரையீரல் வீக்கம் ஏற்பட காரண மாக இருந்த ferritin (பெரிடின்) அளவு குறைந்து, Cytokine (சைட் டோகைன்) போன்ற மருத்துவ சிக்கல்கள் வரவிடாமல் தடுத்தது. கரோனா நோயாளிகளுக்கு ஏற்ப டும் இருதய பாதிப்பை சுட்டிக்காட் டும் LDH (Lactate Dehydrogenase) எனப்படும் ஆய்வுக்கூட அளவும் அதிகரிக்காமல் குறைந்திருந்தது. இதன்மூலம் சித்த மருந்துகளால் இருதயம் சார்ந்த எந்த பின் விளைவுகளும் ஏற்படாமல் இருப்பது தெரியவந்தது.
அதேபோல், சித்த மருந்துகளை எடுத்துக்கொள்வதால் சிறுநீரகபாதிப்பு ஏற்படும் என்ற பரவ லான கருத்து நிலவியதால் அது தொடர்பான ஆய்வும் மேற் கொள்ளப்பட்டது.
சிறுநீரகத்தின் யூரியா, கிரியாட் டினின் அளவுகள் சித்த மருந்து களால் எந்த மாறுதலும் ஏற்படா மல் இருந்தது. ஆய்வுக்கு வந்த 20 பேரும் கரோனா தீவிர நிலைக்கு செல்லாமல், அவசர சிகிச்சைக்கு பரிந்துரைக்க வேண் டிய அவசயமும் ஏற்படவில்லை. குறிப்பாக ஆக்ஸிஜன் அளிக்க வேண்டிய தேவையும் ஏற்பட வில்லை’’ என தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago