பால் நிலுவைத் தொகையை உடனே வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

திருப்பூர்- அவிநாசி அருகே போத்தம்பாளையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கக் கூட்டம் நேற்று நடந்தது. சங்கத்தின் ஒன்றியத் தலைவர் முத்துரத்தினம் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் குழந்தைசாமி, துணைச் செயலாளர் எஸ். வெங்கடாசலம், ஒன்றியக் குழு உறுப்பினர் முத்துசாமி, ஊராட்சி மன்ற உறுப்பினர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் பால் நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். போத்தம்பாளையம், குட்டகம் உள்ளிட்ட பகுதிகளில் தரைமட்ட பாலம் அமைக்க வேண்டும். செம்மம்பாளையம் நான்கு வழிச்சாலையில் பொதுக் குடிநீர் குழாய் அமைக்க வேண்டும். கருங்கல்காடு- முப்பன்காடு இடையில் மழைநீர் சேகரிப்புக் குட்டை அமைக்க வேண்டும். குட்டகம் பொன்னம்பாளையம் கரையில் இருந்து பாரையத் தோட்டம் வரை உள்ள மண் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் கிளைத் தலைவர் சின்னச்சாமி, செயலாளர் பழனிச்சாமி, பொருளாளர் ராஜசேகர், துணைத் தலைவர்கள் கருப்பசாமி, பழனிச்சாமி, துணை நிர்வாகிகள் காளியப்பன், கருப்பாத்தாள் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்