பழங்குடி மக்களின் நிதியை பிறதுறைகளுக்கு பயன்படுத்த கூடாதுஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லாவரம், திருப்போரூர், திருவள்ளூரில் பழங்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், வீரகநல்லூர், ஏகாட்டூர் உள்ளிட்ட 27 ஊராட்சிகளைச் சேர்ந்த இருளர் இனத்தோர் குடிமனைப் பட்டா கோரி, நேற்று ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் டில்லிபாபு, மாவட்ட தலைவர் சின்னதுரை, செயலர் தமிழரசு, பொருளர் குமரவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் சுந்தரராசன், மாவட்ட செயலர் கோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் என, 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, கோரிக்கை முழக்கமிட்டனர்.
‘பல்வேறு காரணங்களால் நெமிலிச்சேரி, பாரிவாக்கம்ஊராட்சி பகுதி தவிர மற்ற பகுதியினருக்கு 15 நாட்களில் குடிமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என ஆட்சியர் பொன்னையா உறுதி அளித்தார்.
பழங்குடி மக்களின் பட்ஜெட் நிதியை பிற துறைகளுக்கு பயன்படுத்த கூடாது, 5 வருடங்களாக நிலுவையில் உள்ள பழங்குடி இன சான்றிதழ்களை வட்டாட்சியரே வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் பல்லாவரத்தில் போராட்டம்நடைபெற்றது.
திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகம் நோக்கி நடைபெற்றஊர்வலத்தில், குடிமனை பட்டாவழங்கி, மத்திய மற்றும் மாநிலஅரசுகளின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ், குடியிருப்புகள் அமைத்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். சங்கநிர்வாகிகளிடம் துணை வட்டாட்சியர் நாராயணன், ‘பழங்குடியினர் மனுக்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago