திண்டிவனம் அருகே 12 பவுன் திருட்டு

By செய்திப்பிரிவு

கடலூர் திருப்பாதிரிபுலியூரைச் சேர்ந்தவர் ரவிக்குமார் மனைவி ரேணுமா(55). இவர் விழுப்புரம் கிழக்கு விஜிபி நகரில் உள்ள தன் வீட்டின் வாடகைப்பணத்தை வாங்கிவர நேற்று தனியே நடந்து சென்றுள்ளார். அப்போது பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள்

அவரை வழிமறித்து இரண்டரை பவுன் செயினை பறித்து சென்றனர். இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

திண்டிவனம் அருகே எறையானூர் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் அப்துல் அஜீஸ்(40). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்குச் சென்றார். நேற்று காலை வீட்டிற்கு வந்த போது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த 12 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து கிளியனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடப்பட்ட நகையின் மதிப்பு ரூ. 3 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்