ரூ. 400 கோடி மதிப்பீட்டில் ஆசனூரில் டெர்மினல் பாயிண்ட் ஐஓசி துணை பொது மேலாளர் தகவல்

By செய்திப்பிரிவு

விழுப்புரம் அருகே காணை கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்கில், இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் மொபைல் அப் அறிமுக விழா மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான 4 டி ஆயில் அறிமுக விழா நேற்று நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற இந்தியன் ஆயில் நிறுவனத்தில் துணை பொது மேலாளர் பாபு நரேந்திரா கூறியது:

விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்னையிலிருந்து தான் தற்போது பெட்ரோல், டீசல் வருகிறது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சென்னைக்கும், திருச்சிக்கும் இடையில் உள்ள ஆசனூரில் ரூ.400 கோடியில் புதிதாக 'டெர்மினல் பாயிண்ட்' அமைக்கப்பட உள்ளது.

இதற்கான பணிகள் ஒன்றரை ஆண்டுக்குள் முடிவுக்கு வரும்.

தற்போது பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் காஸ் சிலிண்டர் டெலிவரி செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட நேரத்தை தேர்வு செய்து, அந்த நேரத்தில் சிலிண்டர் டெலிவரி செய்யுமாறும் தெரிவிக்கலாம். தற்போது 77189 55555 என்ற எண் மூலம் சிலிண்டர் பதிவு செய்யலாம் என்று தெரிவித்தார். இவ்விழாவில் முதுநிலை மேலாளர் அசோகன், மேலாளர் பிரதாப், முகவர் லாவண்யா ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்