பொங்கல் விழாவிற்கு முன்னர் கால்நடைகளுக்கு மருத்துவ முகாம் நடத்தக்கோரி ஆட்சியரிடம் மனு

By செய்திப்பிரிவு

பொங்கல் விழாவிற்கு முன்னர் கால்நடைகளுக்கு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட தமிழர் பாரம்பரிய மஞ்சு விரட்டு நல சங்கத்தினர் மாவட்ட நிர்வாகிகள் காளியப்பன், ரமேஷ், செல்வம் ஆகியோர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

வரும் ஜனவரி மாதம் பொங்கல் திருவிழாவையொட்டி எருது விடும் திருவிழா நடத்த அனுமதி வழங்க வேண்டும். தற்போது கரோனா காலத்தில் மனிதர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது போல் கால்நடைகளுக்கும் பாதுகாப்பளிக்க வேண்டும். கால்நடைகள் பெரியம்மை நோய், கோமாரி நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே பொங்கல் திருவிழாவிற்கு முன்னர் கால்நடைகளுக்கு மருத்துவ முகாம் நடத்தி கால்நடைகளை பாதுகாப்பதோடு, ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, எருதுவிடும் திருவிழா ஆகியவற்றை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்