தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் நெல் கொள்முதலில் நிகழும் முறைகேடுகளை கண்டித்து, அமமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல் கொள்முதல் நிலையங்களில் மாதக்கணக்கில் தேக்கமடைந்து உள்ள நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யும்போது, விவசாயிகளிடம் இருந்து மூட்டை ஒன்றுக்கு ரூ.40 லஞ்சம் கேட்பதை கைவிட வேண்டும். மழையால் பாதிக்கப்படும் விவசாயிகளின் நெல் மூட்டைகளை பாது காக்க உடனடியாக அரசு மூலம் அனைத்து நேரடி கொள்முதல் நிலையங்களிலும் விவசாயி களுக்கு தார்ப்பாய் வழங்கி, 22 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகள் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல், வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்களின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும் நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள உர தட்டுப்பாட்டை போக்கி, உர விலை உயர்வையும் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு, அமமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வேலு.கார்த்திகேயன் தலைமை வகித்தார். இதில், மாவட்ட அவைத் தலைவர் ஜோதி, தஞ்சாவூர் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜேஷ்வரன், திருச்சி மனோகரன், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் டேவிட் அண்ணாதுரை, வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்கள் தங்கப்பன், குப்புசாமி, எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் குணா, மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜன், மாவட்டச் செயலாளர்கள் மா.சேகர். காமராஜ், ராஜசேகர், சீனிவாசன், துரை.மணிவேல், கார்த்திகேயன், முருகேசன் உட்பட திரளான அமமுகவினர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago