குட்டை நீரில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் அருகே குவாரி குட்டையில் விழுந்த ஆட்டை மீட்க முயன்ற பள்ளி மாணவர் தண்ணீரில் மூழ்கி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் அய்யனார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் ராஜா(15). இவர், வல்லம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

ராஜா தனது வீட்டுக்கு அருகேயுள்ள சுடுகாட்டுப் பகுதியில் நேற்று முன்தினம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். இதில், ஒரு ஆடு அருகிலுள்ள குவாரி குட்டையில் விழுந்து தண்ணீரில் தத்தளித்தது. இதையடுத்து ஆட்டை மீட்பதற்காகக் குட்டையில் குதித்த ராஜா தண்ணீரில் மூழ்கினார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் ராஜாவை மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்