ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் உள்ள அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ள பிற நாடுகளின் பழமையான பொருட்களை அந்தந்த நாடுகளில் ஒப்படைப் பதற்காக அந்நாட்டின் கல்வி, கலாச்சார, அறிவியல் துறை அமைச்சர் இங்ரிட் வான் எங்கெல் ஷோவன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்தில் உள்ள லெய் டன் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் சோழர்களின் ஆனை மங்கலச் செப்பேடுகள் உள்ளன. ‘லெய்டன் பட்டயங்கள்’ என்று அழைக்கப்படும் இந்தச் செப்பேடு களை மீட்டு தமிழகம் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் என வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தஞ்சாவூர் சரஸ் வதி மகால் நூலக தமிழ்ப் பண்டிதர் முனைவர் மணி.மாறன் கூறியதாவது: ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில், விஜய நாட்டு மன்னனான மாற விஜயதுங்க வர்மன் தன் தந்தையின் பெயரில் நாகையில் கட்டிய சூடாமணி பன்ம புத்த விஹாரத்துக்காக ஆனைமங்கலத்தைச் சுற்றியுள்ள 26 கிராமங்களைத் தானமாகக் கொடுத்தது குறித்து ராஜேந்திரச் சோழன் 21 செப்பேடுகளில் தாமிரத்தால் சாசனம்(செப்பேடு) செய் தார்.
இவற்றில் 5 செப்பேடுகள் சம்ஸ் கிருதத்திலும், 16 செப்பேடுகள் தமிழிலும் எழுதப்பட்டுள்ளன. சம்ஸ்கிருதத்தில் உள்ளவற்றில் சோழ மன்னர்களின் பரம்பரை யைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழில் உள்ள செப்பேடுகளில் சோழ வம்சம் பற்றி குறிப் பிடப்பட்டுள்ளது. 21 செப்பேடு களும் சோழர்களின் புலிச் சின்னம், 2 விளக்குகள், மீன் வடிவங்கள், சம்ஸ்கிருத உரை பொறிக்கப்பட்ட முத்திரை வளை யத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
இதேபோல, ராஜேந்திரச் சோழனின் பேரனான முதலாம் குலோத்துங்கச் சோழனால் புத்த விஹாரத்துக்கு அளிக்கப்பட்ட தானத்தை அவன் காலத்தில் உறுதி செய்யவும், மேலும் விரி வாக்கிய தானத்தை அளிக்கவும் 3 ஏடுகளைக் கொண்ட 2-வது தொகுதி செப்பேடுகள் அமைந் துள்ளன. இந்த இரு செப்பேட்டுத் தொகுதிகள் ஃப்ளோரன்சியஸ் கேம்பர் என்பவரால் நெதர் லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அவரது வம்சத்தினரால் பாதுகாக்கப்பட்டு, பின்னர் லெய்டன் அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த இரு செப்பேட்டுத் தொகுதிகளின் வாயிலாக சோழர் களின் முழுமையான வரலாறு, கலாச்சாரத்தை அறிந்துகொள்ள முடியும் என்பதால் அவற்றை மீட்டுத் தமிழகத்துக்கு கொண்டு வர, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago