வேலூர் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து நாளை முதல் திருவண்ணாமலை மாவட்டம் வழியாகச் செல்லும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.46 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக புதிய பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், அரக்கோணம் உள் ளிட்ட பகுதிகளுக்கான பேருந்து கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின் றன. வேலூர் பழைய பேருந்து நிலை யத்தில் இருந்து மற்ற பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
பழைய பேருந்து நிலையத்தில் இருந்து அதிகளவிலான பேருந்து கள் இயக்கப்படுவதால் அண்ணா சாலை, பேலஸ் கபே சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் கடுமை யான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு, மாற்றாக திருவண்ணாமலை மாவட்டம் வழியாக இயக்கப்படும் பேருந்து களுக்கு மட்டும் வேறு இடத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் இருந்து பேருந்துகளை இயக்குவது தொடர்பாக ஏற்கெனவே இரண்டுகட்டங்களாக ஆய்வு செய்யப்பட் டது. ஆனால், அங்கு போதிய வசதிகள் இல்லாததால் வேலூர் புதிய மீன் மார்க்கெட் அருகில் உள்ள லாரி ஷெட் பகுதியில் இருந்து பேருந்துகளை இயக்க ஆய்வு செய்யப்பட்டது. அங்கு, மாந கராட்சி சார்பில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், புதிய மீன் மார்க்கெட் அருகே தற்காலிக பேருந்து நிலையம் நாளை (புதன்கிழமை) முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் ஆரணி, தி.மலை, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, சிதம்பரம், கும்பகோணம், திருச்சி ஆகிய ஊர் களுக்கு செல்லும் பேருந்துகள் புதிய மீன் மார்க்கெட் அருகே உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து புதன்கிழமை (நாளை) முதல் இயக்கப்பட உள்ளது.
குடியாத்தம், பேரணாம்பட்டு, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், ஓசூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் புறநகர் பேருந்துகளும் அனைத்தும் மற்றும் நகரப் பேருந்து கள் தொடர்ந்து பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப் படும். வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, ஆற்காடு, காஞ்சிபுரம், தாம்பரம், கல்பாக்கம், அரக்கோணம், திருத்தணி ஆகிய ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago