ரசகுல்லா, ரசமலாய் மற்றும் பெங்காலி இனிப்புகளை 2 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும் என மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர்பா.விஜயலலிதாம்பிகை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூர் மாவட்டம் முத்தூர்பகுதியில் புகார்கள் வரப்பெற்றதன் அடிப்படையில் 2 இனிப்புக் கடைகள், 5 பேக்கரிகள், 2 ஓட்டல்களில் கடந்த 31-ம் தேதி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் காலாவதியான இனிப்புமற்றும் கார வகைகள், குளிர்பான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
பாக்கெட்டுகளில் அடைத்துவிற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு மட்டுமின்றி, சில்லரையாக விற்கப்படும் இனிப்புகளுக்கும் காலாவதி தேதியை கட்டாயம்குறிப்பிட வேண்டும். ஒவ்வோர்இனிப்பு வகையின் விலைக்கு அருகிலேயே காலாவதி தேதியை குறிப்பிட வேண்டும்.
குறுகிய காலத்தில் கெட்டு விடும்ரசகுல்லா, ரசமலாய் போன்ற பால் பொருட்கள், பெங்காலி இனிப்புகளை 2 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். நடுத்தர காலஅளவு கொண்ட லட்டு போன்ற இனிப்புகளை அதிகபட்சம் 4 நாட்கள் பயன்படுத்தலாம்.
நீண்ட கால அளவு கொண்ட நெய் மற்றும் உலர்ந்த பழங்கள் கலந்த இனிப்புகளை 7நாட்கள் வரை பயன்படுத்தலாம். எண்ணெய், நெய், வனஸ்பதி என எதை பயன்படுத்தி இனிப்பு தயாரிக்கப்பட்டது என்பதையும் கடைக்காரர்கள் தெரிவிக்க வேண்டும். விதிமீறும் கடைக்காரர்கள் மீது உணவுப் பாதுகாப்புச் சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago