தமிழ்நாடு தின விழாவை முன்னிட்டு திருப்பூரில் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக தமிழ்நாட்டு கொடியுடன் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு மாநிலம் உருவான நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு தின விழா கொண்டாடப்படும் என கடந்த 2019-ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. தமிழ்நாடு தின விழாவையொட்டி திருப்பூரில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக ரயில்நிலையம் முன் தமிழ் நாட்டுக்கான கொடி ஏற்றப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் சார்பில் தமிழ்நாட்டுக் கொடியுடன் ரயில்நிலையம் முன்பு பெரியார் சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது தமிழ்நாடு தனிநாடாக வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பெரியார் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் அங்ககுமார் தலைமை வகித்தார். திராவிடர் விடுதலை கழக மாநில பொருளாளர் துரைசாமி, மாவட்ட செயலாளர் யாழ்.ஆறுசாமி முன்னிலை வகித்தனர். வாகன பேரணியாக வெள்ளியங்காடு சென்று, அங்குள்ள பெரியார் படிப்பகத்தில் கேக் வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago