அவிநாசி அருகே ரூ.35.26 லட்சம் மதிப்பில் தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட சாலையில் புற்கள் முளைத்துள்ளது. தொடர்புடைய அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வரின் தனிப்பிரிவுக்கு சமூக ஆர்வலர் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து திருப்பூர் மாவட்டம் அவிநாசி நாயக்கன்தோட்டம் பகுதியை சேர்ந்த டி.கே.தியாகராஜன் என்ற சமூக ஆர்வலர், தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு நேற்று அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
அவிநாசி ஒன்றியம் சின்னேரிபாளையம் முதல் சாலையூர் வழியாக வளையபாளையம் மாகாளியம்மன் கோயில் வரை ரூ.35.26 லட்சம் மதிப்பில் கடந்த 10 நாட்களுக்குமுன் தார் சாலை அமைக்கப்பட்டது. தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால், கோரைப் புற்கள் முளைத்துள்ளன. தார் சரியாக ஒட்டாமல் ஜல்லிக் கற்கள் தனியாக பெயர்ந்து வருகின்றன. தரமற்ற சாலை அமைக்க காரணமாக இருந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டிருந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago