இரண்டு கால்களும் செயலிழந்த 59 பேருக்கு ரூ. 14.75 லட்சம் மதிப்பிலான மருந்துப் பொருட் களை ஆட்சியர் வழங்கினார்.
தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை சார்பில் முதுகு தண்டு வட நரம்பு பாதிப்பு ஏற்பட்டு, இரண்டு கால்களும் செயலிழந்து இருசக்கர நாற்காலியை பயன்படுத்தும் நபர்களுக்கு 6 மாதத்துக்குத் தேவையான 12 வகையான மருந்துப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் இலவசமாக வருடத்துக்கு இருமுறை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 2020-ல் அரையாண்டுக்கான மருந்துப் பொருட்களை நேற்று மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி, 59 நபர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.14 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான 12 வகையான மருந்துப் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நலப்பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் பரமசிவன் மற்றும் மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago