கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன.
கரோனா ஊரடங்கால் தமிழக பகுதியான கடலூரில் இருந்து புதுச்சேரி மாநிலத்துக்கு நேற்று முன்தினம் வரை பேருந்துகளை இயக்க அரசு அனுமதிக்கவில்லை. மேலும் புதுச்சேரி மாநிலம் வழி யாக சென்னை சென்ற அரசு பேருந்துகள் புதுச்சேரியில் நிற்காமல் சென்று வந்தன. இதனால் இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழக முதல்வர் பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தில் போக்குவரத்து தடையை நீக்கி பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கேட்டி ருந்தார். அதனடிப்படையில் தமிழகமுதல்வர் பழனிசாமி தமிழக பகுதிகளில் இருந்து புதுச்சேரி மாநிலத்துக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்க உத்தரவிட் டார். அதைத்தொடர்ந்து நேற்று கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் புதுச்சேரி மாநிலத் துக்கு இயக்கப்பட்டன.
பேருந்துகளில் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய் யப்பட்டது. அனைவரும் முகக்கவ சம் அணிய வேண்டும் என்று அறி வுறுத்தப்பட்டது.
மேலும், கிருமி நாசினி தெளிக் கப்பட்டது. நேற்று குறைந்தளவு பயணிகளே பயணம் செய்தனர். கடந்த 7 மாதத்துக்கு பிறகு புதுச்சேரி மாநிலத்துக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிகளுக்கு பேருந்துகள் சென்றன. தற்போது தமிழக பேருந்துகள் வருகையால் புதுச்சேரி பேருந்து நிலையம் முழுமையாக இயங்கியது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago