கரூரில் அதிமுக- திமுகவினரி டையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து திமுக பிரமுகர் உயிரி ழந்தார். இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்து அதிமுக பிரமுகரை கைது செய்யக் கோரி எம்எல்ஏ செந்தில் பாலாஜி தலைமையில் திமுகவினர் நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கரூர் மாவடியான் கோயில் தெருவில் அக்.30-ம் தேதி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக அதிமுக, திமுக சார்பில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. இதில், திமுக விளம்பர பதாகையை அதிமுகவினரும், அதிமுக விளம்பர பதாகையை திமுகவினரும் நேற்று முன்தினம் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த நந்தகுமார் தரப்பினருக்கும், திமுகவைச் சேர்ந்த பிரபாகரன்(55) தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில், காயமடைந்த நந்தகுமார், பிரபாகரனின் மகன் விக்னேஷ்வரன்(28) ஆகியோர் கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக இரு தரப்பி னரும் கரூர் நகர காவல் நிலையத் தில் புகார் அளித்துள்ளனர். அதன்பின், திடீரென நெஞ்சு வலிப்பதாக பிரபாகரன் கூறியதால், தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், அதிமுக தரப்பினர் தாக்கியதால் தான் பிரபாகரன் இறந்ததாக கூறி, இவ்வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும். இதில் தொடர்புடைய அதிமுக பிரமுகரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி தலைமையில் திமுகவினர் காந்திகிராமம் சாலை யில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
மாவட்ட எஸ்.பி பொன்.பகல வன், கோட்டாட்சியர் பாலசுப்ர மணியன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி கொலை வழக்கு பதிவு செய்து உரிய நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளித் தனர். அதன்பின் மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago