தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் திருச்சியில் நேற்று ஒத்துழையாமை இயக்கப் பிரச்சாரம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு களில் மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை அளிக்க உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, நவ.1-ம் தேதி முதல் வெளி மாநிலத்தவருக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கம் நடத் தப்படும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
அதன்படி, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே வில்லியம்ஸ் சாலையில், அதன் மாநகரச் செயலாளர் இலக்குவன் தலைமையில் பொதுக் குழு உறுப்பினர்கள் கவித்துவன், இனியன், வெள்ளம்மாள் மற்றும் கிருஷ்ணமூர்த்தி, ராமராஜ் உள்ளிட்டோர் கடைகள்தோறும் துண்டறிக்கையை அளித்து ஒத்துழையாமை இயக்கப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
கடை உரிமையாளர்கள், வாடகை வாகன மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் ஆகியோரிடம் சென்று தமிழர்களின் வேலை உரிமைகள் எவ்வாறெல்லாம் பறிபோகின்றன என்று எடுத்து ரைத்து பிரச்சாரம் செய்தனர்.
இதனிடையே, போலீஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, கெடுபிடி செய்ததால், பிரச்சாரத்தை தொடர முடியாமல் விரைவாக முடித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என கவித்துவன் குற்றம் சாட்டி னார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago