கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநிலச் செயற் குழுக் கூட்டம் திருச்சி சுப்பிரமணி யபுரத்தில் நேற்று நடைபெற்றது. அமைப்பின் மாநிலத் தலைவர் சம்சுல்லா தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் இ.முகம்மது, பொருளாளர் அப்துல் ரகீம், துணைத் தலைவர் அப்துல் ரகுமான், துணைப் பொதுச் செயலாளர் அப்துல் கரீம், மாநிலச் செயலாளர் இப்ராகிம் மற்றும் நிர்வாகிகள் பாரூக், யூசுப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத உள் ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய நடவடிக் கைகளைக் கைவிட வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் கட்சிகளிடம் அதிக தொகுதிகளைப் பெற்று தேர்த லில் போட்டியிட வேண்டும்.
அரசியல் ஆதாயத்துக்காக தமிழ்நாட்டில் மதப் பிரச்சினை களைத் தூண்டும் வகையில் செயல்படும் சங்பரிவார் அமைப்பு கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியில் உள்ள முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்கி அதிக இடங்களில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago