திருநெல்வேலி பாளையங்கால் வாய் கரையில் பனை விதைகளை விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுமார் 42 கி.மீ. நீளத்துக்கு பாளையங்கால்வாய் அமைந்துள்ளது. இதன் மூலம் 22 வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட 3,500 ஏக்கர் விளைநிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறுகின்றன. மேலும் இந்த கால்வாய் மூலம் நீர்வரத்து பெறும் 57 குளங்கள் வாயிலாக 9,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தூர்வாரப்பட்ட இந்த கால்வாயில் கழிவு நீர் நேரடியாக கலப்பதால் நிலத்தடி நீர் மாசடைகிறது.
இந்நிலையில், பாளையங்கால்வாயின் கரைகளில் பனை விதைகள் விதைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி பகுதியிலிருந்து குறிச்சி பாலம் வரை மொத்தம் 250 பனை விதைகள் விதைக்கப்பட்டன. எஸ்டிபிஐ கட்சி மாவட்ட துணைத் தலைவர் சாகுல் ஹமீது தொடங்கி வைத்தார். மேலப்பாளையம் மண்டல சுகாதார அலுவலர் சாகுல் ஹமீது சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பசுமை மேலப்பாளையம் அமைப்பு இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago