ரூ.23 லட்சம் மதிப்பிலான பால் குளிர்விப்பு மையம் திறப்பு விழா

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் சார்பில் தொகுப்பு பால் குளிர்விப்பு மையம் திறப்புவிழா திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் கருத்துவாம்பாடியில் நடைபெற்றது.

கருத்துவாம்பாடி ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். ஆவின் பொது மேலாளர் இளங்கோ வரவேற்றார். ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள தொகுப்பு பால் குளிர்விப்பு மையத்தை முன்னாள் அமைச் சரும் மாவட்ட ஆவின் தலைவருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி திறந்துவைத்தார்.

மாவட்ட ஆவின் துணை பொதுமேலாளர் நாச்சியப்பன், பொறி யாளர் நடராஜன், மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் தலை வர் நைனாகண்ணு, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோவிந்தராஜ், துரஞ்சாபுரம் ஒன்றிய செயலாளர் ஜெய பிரகாஷ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நாராய ணன், ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் ஏழுமலை, குமாரி, சாலையனூர் ஊராட்சி மன்றத் தலைவர் மாசிலாமணி, அதிமுக நிர்வாகிகள் அரங்கநாதன், கோவிந்தசாமி, சிவக்குமார், கலைச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில், ஆவின் விற்பனை பிரிவு மேலாளர் தருமராஜ் நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்