கலசப்பாக்கம் அருகே கணவரை கொலை செய்த வழக்கில் திடீர் திருப்பமாக அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
தி.மலை மாவட்டம் கலசப் பாக்கம் அடுத்த கடலாடி கிராமத்தில் வசித்தவர் ஆறுமுகம் (40). இவர், கடலாடியில் கட்டப் படும் சார் பதிவாளர் அலுவலக கட்டிட பணி வளாகத்தில் இரவு காவலாளியாக பணி புரிந்து வந்தார். இந்நிலையில், கட்டிட பணி நடைபெறும் இடத்தின் அருகே உள்ள ஏரியில் கடந்த மாதம் 30-ம் தேதி உயிரிழந்து கிடந்தார்.
இதுகுறித்து கடலாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அவரை கொலை செய்தது, அவரது மனைவி ஈஸ்வரி என தெரியவந்தது. இதையடுத்து, அவர் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து காவல்துறையினர் கூறும்போது, “குடும்பப் பிரச்சினைமற்றும் மனைவி மீதான நடத்தை யில் ஏற்பட்ட சந்தேகத்தால், மதுபோதையில் தினமும் வீட்டில் ஆறுமுகம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திர மடைந்த ஈஸ்வரி, ஆறுமுகம் குடிப் பதற்காக வாங்கி வைத்திருந்த மதுபாட்டிலில் கடந்த மாதம் 29-ம் தேதி தூக்க மாத்திரைகளை ஈஸ்வரி கலந்துள்ளார்.
இதையறியாமல், பணிக்கு சென்ற இடத்தில் மதுவை குடித்து ஆறுமுகம் மயக்கமடைந்துள்ளார். அவரை பின்தொடர்ந்து சென்ற ஈஸ்வரி, ஆறுமுகத்தை கைத்தாங் கலாக பிடித்துக் கொண்டு ஏரிக்கரைக்கு சென்று அடித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளார்” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago