16 அம்ச கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தின் நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் சிவன் அருளிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத் தலைவர் செல்வம் தலைமையில், மாவட்டச் செயலாளர் பார்த்தீபன், பொருளாளர் மோகன், அமைப்புச்செயலாளர் ஜெயவேலு ஆகியோர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருளிடம் கோரிக்கை மனு ஒன்று அளித்தனர். அம் மனுவில், "கூட்டுறவு துறை நியாய நிலைக் கடை பணியாளர்களின் ஊதிய மாற்றத்துக்கு ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான ஊதியக்குழு அமைத்து, வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஊதிய மாற்றம் செய்ய வேண்டும். தமிழ்நாடு சிவில் சப்ளை ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும்.
பொது விநியோகத் திட்டத்துக்கு தனித்துறை உருவாக்கப்பட வேண்டும். பணிவரன்முறை செய்யப்படாத 5 பணியாளர்களை எந்தவித நிபந்தனையும் இன்றி பணிவரன் முறை செய்ய வேண்டும்.
ரேஷன்கடைகளில் பணியாளர் கள் முன்பு கட்டுப்பாட்டு பொருள் கள் அனைத்தும் சரியான எடை யில் பொட்டலமாக வழங்க வேண்டும். 500 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகளுக்கு எடையாளர்கள் நியமனம் செய்ய வேண்டும்.
கரோனா தொற்றால் உயிரிழந்த ரேஷன் கடை பணியாளர்கள் குடும் பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அதேபோல, மருத்துவக்குழு காப்பீடு திட்டத்திலும் சேர்க்க வேண்டும்.
கரோனா ஊரடங்கிலும் ரேஷன் கடைகளில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும். விபத்தில் உயிரிழந்த பணியாளர் களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.
பயோ மெட்ரிக் முறையை அமல்படுத்தி தரமான விற்பனை முனையம் வழங்க வேண்டும். இணையம் மற்றும் சர்வர் பிரச்சி னைகளை சரி செய்து விழித்திரை அடிப்படையில் விற்பனை செய் வதற்கு ஆவணம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவ டிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல், வேலூர், ராணிப் பேட்டை மாவட்ட ஆட்சியர்களிடம், நியாய விலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago