கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தை அடுத்த நின்னையூர் கிராமத்தைச் சேர்ந்த கற்பகம்(20) என்பவருக்கும் ரிஷிவந்தியம் அருகே உள்ள பாசார் கிராமத்தைச் சேர்ந்த அயல்துரை என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.
நிறைமாத கர்ப்பிணியான கற்பகத்துக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே தியாகதுருகத்தில் உள்ள மேம் படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர் அனுமதிக்கப்பட் டுள்ளார். அங்கு சென்ற கற்பகத்திடம் செவிலியர்கள், சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்து விடும் என்று கூறி சிகிச்சை அளிக்காமல் அலட் சியப்போக்குடன் இருந்ததாகவும், பணியில் இருந்த ஊழியர்கள் வயிற்றினை அழுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே சுகப்பிரசவம் பலனளிக்காத நிலையில் அறுவை மருத்துவத்திற்கு ஏற்பாடுசெய்யப்பட்டது. இதில், சேய் பிறந்ததும் உயிரிழந்து விட்டதாக மருத்து வர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே கற்பகத்தின் உடல்நிலை மோசமான நிலையில் இருந்ததால் அவரை கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரைசெய்ததைதயடுத்து, கள்ளக் குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று கற்பகத்திற்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவரும் உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த கற்பகத்தின் உறவினர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருததுவ மனையைமுற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதோடு, தியாகதுருகம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களையும் செவிலியரையும் பணிநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத் தினர். போலீஸார் தலையிட்டு சமரசம் செய்தனர்.
தகவலறிந்து அரசு மருத்துவ மனைக்கு விரைந்து வந்த கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் பிரபாகரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் ராஜதாமரை பாண்டியன் தலைமையிலான போலீஸார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறையினர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
இதற்கிடையே, தாய்-சேய்உயிரிழப்பு தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதார துறைதுணை இயக்குநர் சதீஷ் விசாரணை மேற்கொண்டார். தியாகதுருகம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் இருவர், தாய்-சேய் நல அலுவலர், செவிலியர், இரு கிராம சுகாதார செவிலியர்களுக்கு அவர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago