கர்நாடக, ஆந்திர, மகாராஷ்டிர மாநிலங்களில் பெய்த மழையால் வெங்காய சாகுபடி வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் வரத்து குறைந்து, தமிழகத் தில் வெங்காயத்தின் விலை படிப்படியாக உயர்ந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.100 வரையிலும், உழவர் சந்தைகளில் கிலோ ரூ.90-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் அரசு ரூ.45-க்கு மானிய விலையில் பசுமை அங்காடிகளில் வெங்காயம் விற்பனை செய்யும் திட்டத்தை தொடங்கி உள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 9 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடிகளில் மானிய விலையில் வெங்காயம் கிலோ ரூ.45-க்கு விற்பனை தொடங்கியது. இதுதொடர்பாக கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கூறுகையில், ‘‘மாவட்டத்துக்கு தற்போது 7 டன் வெங்காயம் வந்துள்ளது.
9 சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடி மூலம் விற்பனை செய்யப்படுகிறது. கூட்டத்தை பொறுத்து ஒருவருக்கு ஒரு கிலோ முதல் அதிகபட்சம் 2 கிலோ வெங்காயம் விற்பனை செய்கிறோம்.
மேலும், வெங்காயம் வாங்க வருபவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது,’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago