பொது விநியோகத் திட்டத்துக்கு தனித் துறையை உருவாக்க வேண்டும் உட்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஊதியக்குழு அமைத்து, வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊதியம் மாற்றம் செய்ய வேண்டும், பொது விநியோகத் திட்டத்துக்கு தனித்துறை உருவாக்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.
ரேஷன் கடைகளில் சரியான எடையில் அனைத்துப் பொருட்களையும் பொட்டலமாக வழங்க வேண்டும், 500 குடும்ப அட்டைக்கு மேல் உள்ள கடைகளுக்கு எடையாளரை நியமிக்க வேண்டும், 30 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும், கரோனா தொற்றுக்கு உயிரிழந்த பணியாளர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பணியாளர்களை இணைக்க வேண்டும், கரோனா காலத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மே மாதம் முதல் ஊக்கத் தொகை வழங்க வேண்டும், பெண் பணியாளர்களை அவமதித்து பாலியல் தொந்தரவு கொடுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு பணியாளர்களுக்கு வழங்குவது போல் மருத்துவப் படியை 300 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், ரேஷன் கடைகளில் கழிப்பிட வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சேகர் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இதில், நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர். பின்னர், 16 அம்ச கோரிக்கை அடங்கிய மனுவை ஆட்சியர் கந்தசாமியிடம் நிர்வாகிகள் வழங்கினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago