வேலூர், குடியாத்தம் பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நடத்திய திடீர் சோதனையில் 700 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வேலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்த புகாரின்பேரில் நேற்று திடீர் சோதனை நடைபெற்றது.
வேலூரில் 3 பல்பொருள் அங்காடிகள், 13 அரிசி கிடங்குகள், 7 சில்லறை கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 200 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் களை உணவு பாதுகாப்பு அலு வலர்கள் பறிமுதல் செய்தனர்.
குடியாத்தம்
அதேபோல், குடியாத்தம் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட 500 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் கள், பைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து நகராட்சி அதிகாரிகள் வசம் ஒப்படைத்தனர்.மேலும், இரண்டு கடைகளின் உரிமையாளர்களிடம் தலா ரூ.2 ஆயிரம் வீதம் அபராதம் வசூலிக் கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago