உதகை: நீலகிரி மாவட்டம் உதகை அருகே சின்னக்குன்னூர் பகுதியில் உள்ள பெம்பட்டியில் கடந்த 18-ம் தேதி இரவு விவசாய நிலத்துக்குள் புகுந்த காட்டு யானை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. அதை இரவோடு இரவாக தீயிட்டு எரிக்க முயன்றதுடன், புதைக்கவும் முயற்சித்ததாக அதே பகுதியைச் சேர்ந்த சு.விக்னேஸ்வரன் (40), கே.கோபாலகிருஷ்ணன் (20) மற்றும் கோ.அஜீத்குமார் (18) கைது செய்யப்பட்டனர்.
பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாக, வனக் காப்பாளர் மகேந்திரபாண்டியனை பணியிடை நீக்கம் செய்தும், வனவர் ஜாவித்தை பணியிட மாற்றம் செய்தும், மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா உத்தரவிட்டுள்ளார். மாவட்ட வன அலுவலர் கூறும்போது, ‘‘சின்னகுன்னூர் மற்றும் எப்பநாடு பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகள் கண்காணிக்கப்படும். ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகள் அகற்றப்படும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago