திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு சுமைப் பணி தொழிலாளர் சங்கம் நேற்று தொடங்கப்பட்டது. கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் பாஜக கொடியேற்றி தொடங்கி வைத்தார். இதில், மாற்று கட்சிகளைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர், பாஜக சுமைப் பணி தொழிலாளர் சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வடக்கு மாவட்ட தலைவர் வழங்கினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago