கருவலூர் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் குப்பை கொட்ட இடையூறு

By செய்திப்பிரிவு

திருப்பூர்: கருவலூர் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் குப்பையை இடையூறின்றி கொட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பவானிசாகர் பொதுப் பணித் துறை செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு கருவலூர் ஊராட்சி மன்ற தலைவர் (பொறுப்பு) கே.எஸ்.ஆறுமுகம் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில், "அவிநாசி அருகே கருவலூர் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்காக சேகரிக்கப்படும் குப்பையை கொட்டுவதற்கு இடம் தேவைப்பட்டது. இதற்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் வருவாய்த் துறையிடம் கேட்டபோது, ஊராட்சிக்கு சொந்தமான குறிப்பிட்ட இடத்தில் குப்பை கொட்ட இடம் அடையாளம் காண்பிக்கப்பட்டது. ஆனால், உள்ளூரை சேர்ந்த பொதுப் பணித் துறை பணியாளர் அங்கு குப்பை கொட்டக்கூடாது எனக் கூறி இடையூறு ஏற்படுத்தி வருகிறார். எனவே, ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் இடையூறின்றி குப்பை கொட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்