கோவை வடவள்ளி அருகே யுள்ள பாப்பநாயக்கன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தமிழ்ச் செல்வன்(31), பிரபாகரன்(29). தனியார் மருத்துவமனை ஊழியரான தமிழ்ச்செல்வனுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால், பிரபாகரனுடன் சித்திரைச்சாவடி அணைக்கட்டுக்கு சென்றார். அங்குள்ள கைக்காட்டி பாலம் அருகே நொய்யலாற்றின் கரைப்பகுதியில் நின்று இருவரும்புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது தமிழ்ச்செல்வன் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார். அவரை காப்பாற்ற முயன்ற பிரபாகரனும் நீரில் மூழ்கினார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல்தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் வந்து தமிழ்ச்செல்வன், பிரபாகரன் ஆகிய இருவரின் சடலத்தையும் மீட்டனர் .தொண்டாமுத்தூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago