திருவள்ளூர் ஆட்சியராக இருந்தமகேஸ்வரியை காஞ்சி ஆட்சியராகவும், காஞ்சி ஆட்சியராக இருந்த பா.பொன்னையாவை திருவள்ளூர் ஆட்சியராகவும் இடமாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொன்
னையா ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி உள்ளிட்ட அதிகாரிகள் பூங்கொத்து அளித்துவரவேற்றனர்.
இதைத் தொடந்து, அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் பல்வேறு அரசு துறைகளின் அலுவலகங்களுக்கு சென்று, பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிறகு, பல்வேறு துறை அதிகாரிகள் திருவள்ளூர் மாவட்டத்தின் 21-வது ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்ட பொன்னையாவுக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
காஞ்சி மாவட்டத்தில் புதிய ஆட்சியராக பொறுப்பேற்க வந்த மகேஸ்வரி முன்னதாக நேற்று காலையில் காமாட்சி அம்மனை தரிசனம் செய்ததைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தர், பெரும்புதூர் கோட்டாட்சியர் திவ்ய மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் மலர் கொத்து அளித்து வரவேற்பு அளித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago