தாம்பரம் விமானப்படை மையத்தில்பயிற்சி வீரர்களின் நிறைவு அணிவகுப்பு

By செய்திப்பிரிவு

தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த வீரர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நடைபெற்றது.

சென்னை தாம்பரம், விமானப்படை பயிற்சி மையத்தில் உள்ள மெக்கானிக்கல் பயிற்சி மையத்தில் 609 வீரர்கள் கடந்த 67 வாரங்களாக பயிற்சி மேற்கொண்டனர். இப்பயிற்சி நிறைவு பெற்றதையடுத்து, பயிற்சி நிறைவு அணிவகுப்பு நேற்று முன்தினம் நடைபெற்றது. ஜலஹள்ளியில் உள்ள இந்திய விமானப் படை மையத்தின் தலைவர் ஏர் கமாடோர் சார்லஸ் ஆண்ட்ரூஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், பயிற்சி முடித்துள்ள வீரர்கள் பணியில் சேர்ந்த பிறகும் தொடர்ந்து தொழில்நுட்ப தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன், விமானப்படையின் மரபுகளை காக்கும் வகையில் வீரர்கள் செயல்பட வேண்டும் என்றார். பயிற்சியில் அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்பாக செயல்பட்டதற்காக, வினய் குமார் என்பவருக்கு ஆல்ரவுண்டர் கோப்பை வழங்கப்பட்டது. பாதுகாப்புத் துறை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்