மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு எழுமேடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் கடனு தவி வழங்கும் விழா நேற்று நடை பெற்றது.
பண்ருட்டியைச் சேர்ந்த மக ளிர் சுய உதவிக் குழுவினர் தங் களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம்கடனுதவி பெற்றுத்தர வேண்டும்என பண்ருட்டி சட்டப்பேரவை உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வத் திடம் கோரிக்கையை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, அவர் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு, 11குழுக்களைச் சேர்ந்த 118 மகளி ருக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான கடனுதவிக்கு ஏற்பாடு செய்தார்.
அதற்கான கடனுதவி வழங்கும் விழா எழுமேடு கூட்டுறவு சங்கத் தலைவர் ரூபலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சத்யா பன்னீர்செல்வம் எம்எல்ஏ, அண்ணாகிராம ஒன்றியத் தலைவர் ஜானகிராமன் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago