புதுச்சேரியில் பள்ளிகளை கண்காணிக்க வேண்டும் மத்தியக் குழுவின் தலைமை மருத்துவர் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

புதுவை மாநிலத்தில் கரோனா தொற்று தேசிய சராசரியை விடஅதிகரித்திருந்தபோது கரோனா மேலாண்மை பணிகளை மேற் பார்வை செய்ய நிபுணத்துவம் பெற்ற குழுவை அவசரமாக நியமிக்குமாறு பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சருக்கு ஆளுநர்கிரண்பேடி கடிதம் அனுப்பியி ருந்தார். அதையடுத்து ஜிப்மர் மருத்துவர்கள், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழக விஞ்ஞானிகள் (ஐசிஎம்ஆர்) கொண்ட மத்தியக் குழு நியமிக்கப்பட்டது.

மத்திய குழுவுக்கு தலைமை வகிக்கும் டாக்டர் பிரதீப் கவுர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கோவிட் தொற்றுகள், இறப்பு களை குறைப்பதில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுகிறோம். வைர ஸின் நேர்மறை வீதம் குறைந்து வந்தாலும், ஆர்டிபிசிஆர் நேர் மறை விகிதம் போதியளவு குறையவில்லை. கோவிட் தொற்றுகளின் காரணத்தை பகுப்பாய்வு செய்யவேண்டும். எங்கிருந்து தொற்று களை அதிகளவில் பெறுகிறோம் என்பதை கண்டறிய வேண்டும். கண்டறியப்படும் பகுதிகளில் அதிக சோதனை, கண்காணிப்புகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். தொடர்புத் தடம் அறியும் பகு தியை மேம்படுத்த வேண்டும். அதன்மூலம் தொற்று தொடர்பை தனிமைப்படுத்தி அவர்கள் வெளியே சென்று மற்றவர்களுக்கு பரப்புவதை தடுக்க முடியும். இது தொற்றின் தாக்கத்தை மேலும் குறைக்கும்.

பள்ளிகள் கண்காணிப்பு

பள்ளிகள் எவ்வாறு இயங்குகின் றன என்பதை கண்காணிக்க வேண் டும். பள்ளிக் குழந்தைகளின் சுகாதார நிலையை ஆய்வு செய்ய வேண்டும். முகக்கவசம் அணிவதுமிக முக்கியம். சென்னையில் அண் மையில் நடந்த கணக்கெடுப்பை சென்னை மாநகராட்சி பகிர்ந்து கொண்டது. அதன்படி நகரத்தில் 3,600 பேரை கணக்கெடுத்தது. அதில் 30 சதவீதம் பேர் மட்டுமே மூக்கு, வாய் மீது முகக்கவசம் அணிந்திருந்தனர். மற்ற 20 சதவீ தம் பேர் மூக்கு, வாயை சரியாக மறைக்கவில்லை.

அதேபோல் புதுச்சேரியிலும் ஒரு கணக்கெடுப்பை செய்ய வேண்டும். முகக்கவசம் பயன்படுத்துதல் பற்றிவிழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். முகக்கவசம் அணிய யோசனையை ஏற்படுத்த வேண்டும். முகக்கவசம் இலவசமாக தருதல், பொது இடங்களில் மக்கள் முகக் கவசங்கள் அணியாவிட்டால் அபராதம் விதிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்