கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மாயமான மண்டபம் மீனவர்கள் 4 பேர் மீட்பு

By செய்திப்பிரிவு

: மண்டபத்தில் இருந்து விசைப்படகில் சிப்பியான், ஆரோக்கியம், சூசை, டேவிட் ஆகிய 4 மீனவர்கள் கடந்த 28-ம் தேதி கடலுக்குச் சென்றனர். 29-ம் தேதி மாலை வரை 4 மீனவர்களும் கரை திரும்பவில்லை. இதுகுறித்து மீன்வளத் துறை உதவி இயக்குநரிடம் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். அவர்களை விசைப்படகில் சென்று மீனவர்கள் தேடினர். இதனிடையே, காணாமல் போன மீனவர்கள், விசைப்படகு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால் சர்வதேச கடல் எல்லை பகுதியில் நங்கூரமிட்டு அங்கேயே காத்திருப்பதாக நேற்று காலை தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கே சென்ற இந்திய கடற்படையினர் மீனவர்களை பத்திரமாக படகுடன் மீட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்