வில்லிபுத்தூரில் எழுத்தறிவு இல்லாதோருக்கான கற்போம் எழுதுவோம் இயக்கம் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.
வட்டாரவள மைய மேற்பார்வையாளர் எஸ். மாடசாமி பயிற்சியைத் தொடங்கிவைத்துப் பேசியதாவது: பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம், 15 வயதுக்கு மேற்பட்ட எழுத, படிக்கத் தெரியாதவருக்கு, அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும் நோக்கில் "கற்போம் எழுதுவோம் இயக்கம்" என்ற புதிய திட்டத்தைச் செயல் படுத்த திட்டமிட்டுள்ளது. 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 1.24 கோடி பேர் முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாத வர்கள் எனத் தெரிய வந்துள்ளது. இப் பயிற்சி நவம்பர் முதல் 2021 பிப். வரை தன்னார்வலர்களைக் கொண்டு வழங்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago