வில்லிபுத்தூரில் ‘ஆண்டாள் அந்தாதி' நூல் வெளியீட்டு விழா

By செய்திப்பிரிவு

வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கவிஞர் சுரா எழுதிய 'ஆண்டாள் அந்தாதி' நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்ற வில்லிபுத்தூர் கிளைத் தலைவர் கோதையூர் மணியன் முதல் பிரதியை வெளியிட, சிவகாசி அய்யநாடார்-ஜானகியம்மாள் கல்லூரியின் முதுகலை தமிழ் துறைத் தலைவர் க.சிவனேசன் பெற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து தமிழார்வலர் மு. சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார். நூலாசிரியர் கவிஞர் சுரா ஏற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் க.துள்ளுக்குட்டி, இலக்கிய ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்