தேவர் நினைவிடத்தில் பொதுமக்கள் மரியாதை

By செய்திப்பிரிவு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மரியாதை செலுத்தினர்.

பசும்பொன்னில் முத்துராம லிங்கத் தேவரின் 113-வது ஜெயந்தி விழா மற்றும் 58-வது குரு பூஜை விழா நேற்று நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் பால் குடம், முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து தேவருக்கு மரியாதை செலுத்தினர்.

முதல்வர் வருகையை முன்னிட்டு பசும்பொன் நுழைவு வாயில் முதல் தேவர் நினைவிடம் வரை அதிமுக சார்பில் வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்தன. முதல்வரை வரவேற்கும் பதாகைகளும் வைக்கப்பட்டிருந்தன.

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் சட்டம்-ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தலைமையில் தென்மண்டல ஐ.ஜி. முருகன், வடக்கு மண்டல ஐ.ஜி. பொன்.நாகராஜன், டிஐஜிக்கள் என்.எம்.மயில்வாகனன் (ராமநாதபுரம்), காமினி (வேலூர்), ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் ஆகியோர் பாதுகாப்புப் பணியை கண்காணித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 8,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்தாண்டு எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி தேவர் குரு பூஜை விழா அமைதியாக நிறைவு பெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்