விருதுநகர் வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க செயற்குழுக் கூட்டம் விருதுநகரில் நடை பெற்றது.
இதற்கு மாவட்ட அவைத் தலைவர்கள் தங்கராஜ், செல்வ மணி தலைமை வகித்தனர். தெற்கு மாவட்டச் செயலாளா் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்டச் செயலர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர். விருதுநகர் எம்எல்ஏ ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், ராஜபாளையம் எம்எல்ஏ எஸ்.தங்கப்பாண்டியன், தென்காசி எம்.பி. தனுஷ்குமார், திமுக சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் குன்னூர் சீனிவாசன், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் வனராஜா உட்பட பலர் பங்கேற்றனர். வரும் தேர்தலில் திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய் வது, உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago