தீபாவளியைக் கொண்டாட குடும்ப அட்டைக்கு அரசு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
வில்லிபுத்தூரில் எம்எல்ஏ தி.ராமசாமி எழுதிய `எனது அரசியல் பயணம்' நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற முத்தரசன் பின்னர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
தீபாவளி நிவாரணத் தொகை யாக குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். வடகிழக்குப் பருவ மழை தொடங்கினால் என்ன பிரச்சினை ஏற்படும் என்று தெரிந்தும் முதல்வர் உரிய நடவடிக்கைகளை எடுக்காததால் ஒருநாள் இரவில் பெய்த மழை சென்னையைச் சீரழித்துவிட்டது.
தமிழகத்தில் அதிமுக முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில், அதன் கூட்டணியான பாஜக தலைவர் முருகன், நாங்கள்தான் முதல்வர் வேட்பாளரை அறிவிப்போம் என்று கூறியது குறித்து அதிமுக தலைமைதான் பதில் அளிக்க வேண்டும், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago