பர்கூர் அருகே கொங்கன்சேறு கிராமத்தில் ராகி வயல் தினவிழா நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், எலுமிச்சங்கிரி வேளாண்மை அறிவியல் மையம் சார்பில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் வழிகாட்டுதலின்படி புதிய சாகுபடி தொழில்நுட்பங்களை விவசாயிகள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் விவசாயி களின் நிலங்களில் முதன்மை செயல்விளக்க திடல்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பர்கூர் வட்டாரத்தில் உள்ள கொங்கன்சேறு கிராமத்தில் ராகியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை செயல்விளக்க திடல் அமைக்கப் பட்டுள்ளது. அங்கு ராகி வயல் தின விழா நடத்தப்பட்டது.
இதில் பங்கேற்ற வேளாண்மை அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் சுந்தர்ராஜ், வேளாண்மை அறிவியல் மையத்தின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். பர்கூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சகாயராணி வேளாண்மைத்துறையின் சிறப்புத் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago