நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும், நீட் தேர்வு எழுதாமல் இருந்தாலும், பிலிப்பைன்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவக் கல்வி பயிலலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷனல் கன் சல்டண்ட் நிறுவன நிர்வாகிகள் கூறியதாவது:
லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷனல் கன்சல்டண்ட் நிறுவனம் கடந்த 8 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் 150 மாணவர்களுக்கு மேல் பிலிப்பைன்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை மருத்துவம் படிக்க அனுமதி பெற்றுத் தருகிறது.
இதற்காக மாணவர்கள் சேர்க்கைக்கான கருத்தரங் குகளை சேலம், ஈரோட்டில் லிம்ரா நிறுவனம் நடத்துகிறது. இதில் கலந்து கொள்ள கட்டணம் இல்லை. நாளை (நவம்பர் 1-ம் தேதி) ஈரோட்டில் ஓட்டல் ரத்னா ரிஜன்சியில் காலை 10.30 மணி முதல் கருத்தரங்கு நடக்கிறது. அன்று மாலை 5 மணிக்கு சேலம் நெடுஞ்சாலை நகர் ஜங்ஷன் மெயின் ரோட்டிலுள்ள சிவராஜ் ஓட்டலில் கருத்தரங்கு நடக்கிறது. வெளிநாட்டில் குறிப்பாக பிலிப்பைன்ஸில் மருத்துவம் படிக்க விருப்பமுள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.
தங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் கருத்தரங்கில் தெரிந்து கொள்ளலாம். எம்பிபிஎஸ் வகுப்பில் ்தங்களுக்கான இடத்தையும் உறுதி செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9952922333 மற்றும் 9445783333 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என லிம்ரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago