ஆரணியில் டிஜிட்டல் பேனர்களை அச்சிட்டுக் கொடுக்கக்கூடாது என உரிமையாளர்களுக்கு துணை காவல் கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் எச்சரித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர காவல் நிலையத்தில் டிஜிட்டல் பேனர் தயாரிக்கும் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. துணை காவல் கண்காணிப்பாளர் கோட் டீஸ்வரன் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசும்போது, “தமிழகத்தில் டிஜிட்டல் பேனர் களை வைக்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவை மீறி, ஆரணி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வணிகர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் டிஜிட்டல் பேனர்களை வைத்துள்ளனர். பொது இடங்கள், சாலைகள் மற்றும் மின் கம்பங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்படுவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மக்களின் கவனம் திசை திருப்பப்பட்டு, விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும். தடையை மீறி டிஜிட்டல் பேனர்களை வைத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தடை உத்தரவை மீறி அரசியல் நிகழ்ச்சிகள், சுப மற்றும் துக்க நிகழ்ச்சிகளுக்கு டிஜிட்டல் பேனர்களை அச்சிட்டு கொடுக்கக்கூடாது. தடையை மீறி அச்சிட்டு கொடுத்தால் டிஜிட்டல் பேனரை தயாரிக்கும் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கடைகளுக்கு ‘சீல்' வைக்கப்படும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago