ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் புதிதாக 132 பேருக்குகரோனா தொற்று உறுதி

By செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் 132 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 62 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 30-ஆக அதிகரித் துள்ளது.

அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக 43 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 639-ஆக அதிகரித் துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,612-ஆக உயர்ந்துள்ளது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத் தில் கரோனா தொற்றுக்கு, மேலும் 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,563-ஆக அதி கரித்துள்ளது.

இவர்களில் 16,952 குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 350 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 261 பேர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்