தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 30 பவுன் நகை, பணம் திருட்டு

By செய்திப்பிரிவு

திருப்பூர்: திருப்பூர் தென்னம்பாளையம் அருகே நாவிதன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லக்கண்ணு (47). இவர், தனியார் நிட்டிங் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 25-ம் தேதி உறவினர் வீட்டு திருமண நிகழ்வில் பங்கேற்க வேண்டி, வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் புதுக்கோட்டை சென்றுள்ளார். நேற்று முன்தினம் திருப்பூர் திரும்பியபோது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 30 பவுன் தங்க நகைகள், ரூ.25 ஆயிரம் பணம் மற்றும் பொருட்கள் திருடுபோயிருந்தன. இதுதொடர்பாக செல்லக்கண்ணு அளித்த தகவலின்பேரில் தெற்கு காவல் நிலைய போலீஸார் சென்று ஆய்வு நடத்தினர். கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இதுதொடர்பாக வழக்கு பதிந்து, உதவி காவல் ஆணையர் நவீன்குமார் மேற்பார்வையிலும், ஆய்வாளர் பிரகாஷ் தலைமையிலும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்