கோவை மேற்கு சுழற்சங்கம் நடத்தும் ‘யுவா-2020’ இளைஞர்களுக்கு தலைமை மேம்பாட்டு பயிற்சிகோவை: இளைஞர்கள் தலைமைப் பண்பை வளர்த்துக்கொள்ளும் வகையில் கோவை மேற்கு சுழற்சங்கம் சார்பில், ஆன்லைன் வழியாக பயிற்சி நடத்தப்படுகிறது. கரோனா தொற்று காலத்திலும் ‘வளமான வாழ்வின் வருங்காலம், வளரும் இளைஞர்தம் கையில்’ எனும் நோக்கத்தோடு இளைஞர்களைச் சிறந்தகுடிமகன்களாகவும், பல்துறையில் ஆற்றல் மிக்கவர்களாகவும் உருவாக்கும் எண்ணத்தோடு ‘யுவா-2020’ தலைமை மேம்பாட்டு பயிற்சி கோவை மேற்கு சுழற்சங்கம் சார்பில் இன்று (அக்.30) தொடங்குகிறது.இதைத் தொடர்ந்து நவம்பர் 1-ம் தேதி, 7-ம் தேதி, 8-ம் த

By செய்திப்பிரிவு

பங்கேற்க விரும்பும் இளைஞர்கள் அருகிலுள்ள சுழற்சங்கங்கள் மூலமாகவோ அல்லது அவை சார்ந்த இணை அமைப்புகள் மூலமாகவோ தொடர்புகொண்டு, விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, பூர்த்திசெய்து வழங்க வேண்டும். yuvaryla2020@gmail.com எனும் மின்னஞ்சல் மூலமும் விண்ணப்பங்களைப் பெறலாம். பதிவுசெய்ய கட்டணம் எதுவும் கிடையாது. இந்த நிகழ்வின் மீடியா பார்ட்னரான ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும்,  சக்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினீயரிங் அண்ட் டெக்னாலஜி, எஸ்எஸ் மார்பிள் ஆகியவையும் இணைந்து வழங்குகின்றன. கூடுதல் விவரங்களுக்கு 9843012109, 8344692104 என்ற செல்பேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்